2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி
ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் லீக் சுற்று போட்டிகளில் நடுவராக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 16 நடுவர்கள் மற்றும் நான்கு போட்டி நடுவர்கள் உள்ளனர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் 12 பேர் ஐசிசி நடுவர்களின் எலைட் குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர். ஐசிசி நடுவர்களின் எலைட் பேனலைச் சேர்ந்த 12 போட்டி அதிகாரிகள் பட்டியலில் நியூசிலாந்தின் கிறிஸ்டோபர் கஃபானி, இலங்கையின் குமார் தர்மசேனா, தென்னாப்பிரிக்காவின் மரைஸ் எராஸ்மஸ், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், இங்கிலாந்தின் மைக்கேல் கோஃப், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, இந்தியாவின் நிதின் மேனன், ஆஸ்திரேலியாவின் பால் ரீஃபெல், ரோட்னி டக்கர், பாகிஸ்தானின் அஹ்சன் ராசா மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஜோயல் வில்சன் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி எலைட் குழுவில் இல்லாத நான்கு பேர்
ஐசிசி எலைட் குழுவில் இடம் பெறாத வங்கதேசத்தின் ஷர்புத்தூலா இப்னே ஷாஹித், ஆஸ்திரேலியாவின் பால் வில்சன், இங்கிலாந்தின் அலெக்ஸ் வார்ஃப் மற்றும் நியூசிலாந்தின் கிறிஸ் பிரவுன் ஆகியோர் ஐசிசி வளர்ந்து வரும் நடுவர் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்கிடையில், ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் பட்டியலில் நியூசிலாந்தின் ஜெஃப் குரோவ், ஜிம்பாப்வேவின் ஆண்டி பைக்ராஃப்ட், வெஸ்ட் இன்டீஸின் ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் இடம் பெற்றுள்ளனர். அக்டோபர் 5இல் நடக்கும் முதல் போட்டியில் அந்த ஆட்டத்தின் கள நடுவர்களாக நிதின் மேனன் மற்றும் குமார் தர்மசேனா ஆகியோர் இருப்பார்கள். மூன்றாவது நடுவராக பால் வில்சனும், நான்காவது நடுவராக ஷர்புத்தூலாவும் செயல்படுவார்கள். போட்டியின் ரெஃப்ரியாக ஜிம்பாப்வேயின் பைக்ராஃப்ட் செயல்படுவார்.