2027 உலகக் கோப்பை நடைபெறப்போகும் மைதானங்கள் எவை தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டம் மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ள சூழலில், இப்போட்டிகள் நடைபெறவுள்ள 12 மைதானங்கள், புதிய கருப்பொருள் மற்றும் போட்டி வடிவத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன், டர்பன், கெபெர்ஹா உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதேபோல ஜிம்பாப்வேயில் ஹராரே, புலவாயோ மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விக்டோரியா ஃபால்ஸ் ஆகிய மூன்று மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நமீபியா நாட்டின் விண்ட்ஹோக் மைதானமும் முதல்முறையாக உலக கோப்பை போட்டியை நடத்தவுள்ளது.
முழக்கம்
'உபுண்டு' தத்துவமும் பிராண்ட் முழக்கமும்
இத்தொடருக்காக 'Three Nations, One Heartbeat' என்ற புதிய பிராண்ட் முழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற 'Ubuntu) தத்துவத்தை மையமாகக் கொண்டு, மனிதநேயம், பரஸ்பர அன்பு மற்றும் கலாச்சார ஒற்றுமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இத்தொடரின் அதிகாரப்பூர்வ லோகோவும் அடையாளமும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க சுற்றில் குறைந்த தரவரிசை கொண்ட மூன்று அணிகள் 'சூப்பர் சீரிஸ்' சுற்றில் மோதி, அதில் வெற்றி பெறும் ஒரு அணி மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.
அதன் பின்னர் தகுதிபெற்ற 12 அணிகள் தலா ஆறு அணிகள் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடும்.
சூப்பர் 7
அரையிறுதிக்கு முன்னேறும் 'சூப்பர் 7' சுற்று
இரண்டாம் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், சிறந்த முறையில் நான்காம் இடம் பிடிக்கும் ஒரு அணியும் சேர்த்து மொத்தம் ஏழு அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று கோப்பைக்காக மோதும்.