ICC Champions Trophy 2025 Qualified Teams : சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்
செய்தி முன்னோட்டம்
எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஐசிசி 2025ல் மீண்டும் நடக்க உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் மூலம் இதில் பங்கேற்கும் அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் போட்டியில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகளும், போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: தகுதி பெற்ற அணிகள் : இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பாகிஸ்தான்.
ICC Champions Trophy 2025 Qualified Teams Final List
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி வடிவம்
எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடப்படும்.
இதில், குழுநிலையில், எட்டு அணிகளும் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை விளையாடும்.
இதைத் தொடர்ந்து இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அதைத் தொடர்ந்து அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.
இந்தியா கடைசியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை எம்எஸ் தோனி தலைமையில் 2013இல் கைப்பற்றியது.
மேலும் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை இரண்டு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி உள்ளது.