
2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்!
செய்தி முன்னோட்டம்
அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், இந்திய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
ரோஹித் ஷர்மா அனைத்து வடிவ கிரிக்கெட்டிற்கும் நியமிக்கப்பட்ட இந்திய கேப்டனாக இருந்தாலும், 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
கடைசியாக 2022 டி20 உலகக்கோப்பை சாம்பியனான இங்கிலாந்துடன் நடந்த அரையிறுதி போட்டியில் விளையாடி இருந்தார்.
அந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியின் போது, அணியின் துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுலும் அதற்கு பிறகு டி20 போட்டியில் விளையாடவில்லை.
ravi shastri presses to make hardik pandya as captain
ஹர்திக் பாண்டியனை நிரந்தர டி20 கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்
2022 உலகக்கோப்பை படுதோல்விக்கு பிறகு, இந்தியாவின் அனைத்து டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா வெற்றகரமாக வழிநடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் 2023 இல் சில புத்துணர்ச்சியூட்டும் இளம் திறமையான வீரர்கள் இருப்பதால், இந்தியா புதிய ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20ஐ அணியைக் காணக்கூடும் என்று ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார்.
மேலும், "இப்போது பிசிசிஐ 2007ல் செய்ததை போலவே இளம் திறமையான வீரர்களை தேர்வு ஹர்திக் பாண்டியா ஆலோசனையின்படி தேர்வு செய்வார்கள் என தெரிகிறது." என தெரிவித்துள்ளார்.
இதனால் ஐபிஎல் அணியை சிறப்பாக வழிநடத்தும் ஹர்திக் பாண்டியனை இந்தியாவின் நிரந்தர கேப்டன் பதவிக்கு கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.