மேற்கிந்தியத் தீவுகளின் ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் ஹர்திக் பாண்டியா
செய்தி முன்னோட்டம்
மேற்கிந்தியத் தீவுகளில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய அணி. நேற்று இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று.
தொடரை வெல்ல இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்து இந்தியா, 200 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்து ஹர்திக் பாண்டியா தலைமையில் வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் போட்டிக்கு பின்பான உரையாடலில் தங்களுக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை என, மேற்கிந்தியத் தீவுகளில் தங்களுக்குச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்த தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
கிரிக்கெட்
அதிருப்தி தெரிவித்திருக்கும் ஹர்திக் பாண்டியா:
போட்டி முடிவடைந்த பின்பு நடைபெற்ற உரையாடலில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் தற்போதைய வர்ணனையாளருமான டேரன் கங்கா, அப்போட்டி நடைபெற்ற மைதானம் குறித்தும், இந்திய அணிக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
போட்டி நடைபெற்ற பிரையன் கிரிக்கெட் மைதானமானது, சிறந்த மைதானங்களுள் ஒன்று எனக் கூறிய ஹர்திக் பாண்டியா, பின்னர் இந்திய அணிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகளின் ஏற்பாடுகள் குறித்த தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.
தங்களுக்கான அடிப்படை வசதிகள் கூட சரியாகச் செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் அவர், வரும் காலத்தில் அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறு மேற்கிந்தியத் தீவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.