'மும்பை இந்தியன்ஸின் எம்எஸ் தோனி கீரன் பொல்லார்ட்' : ஹர்பஜன் சிங் புகழாரம்!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பேட்டர் கீரன் பொல்லார்டை எம்எஸ் தோனியுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
பொல்லார்ட் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து அணியில் பல்வேறு வெற்றிகளில் முக்கிய பங்காளித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 189 போட்டிகளில் விளையாடி 147.32 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,412 ரன்களும், 69 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மேலும், 2023 சீசனுக்கு முன்னதாக ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இருப்பினும், அவர் வீரராக ஓய்வு பெற்ற பிறகு, அவரை பேட்டிங் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைத்துக் கொண்டது.
harbhajan praises pollard
பொல்லார்ட் குறித்து பேசிய ஹர்பஜன் சிங்
மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டுடன் பல ஆண்டுகளாக டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்ட ஹர்பஜன், கீரன் பொல்லார்டை மும்பை இந்தியன்ஸின் எம்எஸ் தோனி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், "பொல்லார்ட் சிறந்த வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸின் முதுகெலும்பாக இருந்தார்.
ஆட்டம் மும்பை இந்தியன்சுக்கு சாதகமாக வரவில்லை என்றாலும், அவர் கிரீஸில் இருக்கும் வரை, சாத்தியமற்றதாகத் தோன்றும் விஷயங்களை அவரால் சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
அவர் பேட்டிங் செய்யும் போது எந்த ஒரு பந்து வீச்சாளர் மீதும் அழுத்தம் கொடுக்கக்கூடிய எங்கள் தோனி." என்று கூறினார்.
இதற்கிடையே ஐபிஎல் 2022 ஏலத்தில் டிம் டேவிட்டை பொல்லார்டின் வாரிசாக மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.