LOADING...
Happy Birthday Virat Kohli : சேஸ் மாஸ்டரின் பலரும் அறியாத சில கிரிக்கெட் புள்ளிவிவரங்கள்
விராட் கோலியின் பிறந்தநாள் ஸ்பெஷல்

Happy Birthday Virat Kohli : சேஸ் மாஸ்டரின் பலரும் அறியாத சில கிரிக்கெட் புள்ளிவிவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2023
09:20 am

செய்தி முன்னோட்டம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. தனது பிறந்த நாளில் நடக்கும் இந்த போட்டியில் விராட் கோலி சதமடித்தால், 49 சதங்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார். இதுவரையில், அவர் தனது பிறந்த நாள் அன்று ஒரு சதம் கூட அடிக்காத நிலையில், தற்போது சிறப்பான ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டியில் சதமடித்து சாதனை செய்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Virat Kohli unfamiliar records in cricket

பலரும் அறியாத விராட் கோலியின் சில கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்

2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி வீசிய பந்து ஒயிடு ஆன நிலையில், கெவின் பீட்டர்சனை தோனி ஸ்டம்பிங் செய்தார். இதன் மூலம், ஆடவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 0வது பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். விராட் கோலி சேசிங் செய்யும்போது சிறப்பாக பேட்டிங் செய்பவர் என்பதால் சேஸ் மாஸ்டர் என வர்ணிக்கப்படும் நிலையில், தனது 48 ஒருநாள் சாதனைகளில் சேஸிங்கின்போது மட்டும் 26 சதங்களை எடுத்துள்ளார். இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி நடக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலியின் பிறந்தநாளுக்காக சிறப்பு வாணவேடிக்கைகள் மற்றும் லேசர் ஷோக்களை நடத்த பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.