LOADING...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகும் கம்பீர்? இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா?
கம்பீர் தற்போது 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகும் கம்பீர்? இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
01:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஐபிஎல் தொடருக்கு மீண்டும் திரும்புவதற்கான ஒரு வியக்கத்தக்க சலுகையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பங்குதாரர்களில் ஒருவர், கம்பீருக்கு 'பங்குதாரர், ஆலோசகர் மற்றும் CEO' ஆகிய மூன்று பொறுப்புகளை ஒரே நேரத்தில் வழங்க முன்வந்துள்ளதாக 'தைனிக் ஜாக்ரன்' செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னணி

சலுகையின் பின்னணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெரும்பான்மையான பங்குகள் புதிய உரிமையாளர்களுக்கு மாற்றப்பட உள்ளன. இந்த புதிய நிர்வாகத்தின் ஒரு பகுதியாக, கம்பீருக்கு அணியில் 2 முதல் 3 சதவீத பங்குகளை வழங்க அவர்கள் தயாராக உள்ளனர். இது நடந்தால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் உரிமையாளராகவும், ஆலோசகராகவும் இருக்கும் முதல் முன்னாள் வீரர் என்ற பெருமையை கம்பீர் பெறுவார்.

சிக்கல்

BCCI-யின் சட்ட சிக்கல் என்ன?

உச்சநீதிமன்றத்தின் லோதா கமிட்டி பரிந்துரைகளின்படி, ஒருவர் இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராக இருக்கும்போதே ஐபிஎல் அணியில் எந்தப் பொறுப்பையும் வகிக்க முடியாது. இது 'Conflict of Interest' விதியாக கருதப்படுகிறது. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சலுகையை ஏற்க வேண்டுமானால், கம்பீர் தனது இந்திய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது தற்போதைய ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீடிக்கிறது. கம்பீர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி அமெரிக்கா, நமீபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Advertisement