Page Loader
சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
இனவெறி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 20, 2023
11:58 am

செய்தி முன்னோட்டம்

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கேரி பாலன்ஸ், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 33 வயதான பாலன்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 16 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார். அங்கு கடைசியாக 2017 இல் இடம் பெற்ற நிலையில் அதன் பிறகு ஃபார்ம் அவுட் மற்றும் இனவெறி சர்ச்சையில் சிக்கியதால் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். இந்நிலையில், அங்கிருந்து கிளம்பி தனது சொந்த நாடான ஜிம்பாப்வே அணியில் இணைந்த பாலன்ஸ், கடந்த பிப்ரவரியில் விளையாட ஆரம்பித்தார். ஜிம்பாப்வே அணிக்காக ஒருடெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியிலும் இடம்பெற்றார்.

gary ballance retirement letter

ஓய்வு குறித்து அறிக்கை வெளியிட்ட கேரி பாலன்ஸ்

திடீர் ஓய்வு குறித்து கேரி பாலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகவும் யோசித்த பிறகு, நான் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஜிம்பாப்வேக்கான எனது நகர்வு விளையாட்டுக்கு புதிய மகிழ்ச்சியை வழங்கும் என்று நான் நம்பினேன். மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காகவும், என்னை அவர்களின் அணியில் வரவேற்றதற்காகவும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ஆனால், நான் தொழில்முறை விளையாட்டின் கடுமைக்கு என்னை அர்ப்பணிக்க விரும்பாத நிலையை அடைந்துவிட்டேன். அதையும் மீறி தொடர்ந்தால் இது ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கும் விளையாட்டிற்கும் கேடு விளைவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.