Page Loader
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க தயார்: அஜய் ஜடேஜா அதிரடி
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அஜய் ஜடேஜா விருப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க தயார்: அஜய் ஜடேஜா அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 06, 2023
06:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், நிபுணருமான அஜய் ஜடேஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனக்கு அழைப்பு விடுத்தால் இணையத் தயார் என தெரிவித்துள்ளார். 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானின் வியக்கத்தக்க வெற்றிக்குப் பிறகு, அந்த அணியின் வழியாக இருந்த அஜய் ஜடேஜாவின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்த அஜய் ஜடேஜா ஆசிய அணியை இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து போன்ற ஜாம்பவான்களை வீழ்த்த உதவினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர்களின் வெற்றி, கிளென் மேக்ஸ்வெல்லின் மாபெரும் இரட்டைச் சதத்தால் மட்டுமே இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Ajay Jadeja ready to coach pakistan cricket team

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக விருப்பம்

ஸ்போர்ட்ஸ் டாக் உடனான சமீபத்திய பேட்டியில், பாகிஸ்தானில் இருந்து வளர்ந்து வரும் ஆர்வம் குறித்து ஜடேஜா உரையாற்றினார். அதில், பாகிஸ்தான் பயிற்சியாளராக செயல்பட தயாராக உள்ளதாக கூறினார். அவர் விரிவாக, "நான் எனது இதயத்தையும் அனுபவத்தையும் ஆப்கானிஸ்தான் அணியில் செலுத்தினேன். பாகிஸ்தானுக்கு ஒரு காலத்தில் இதேபோன்ற சூழல் இருந்தது என்று நான் நம்புகிறேன். அங்கு அணி வீரர்களிடையே வடிகட்டப்படாத வார்த்தைகள் பறந்தன." என்றார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையில் ஐந்து தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், இப்போது ஜடேஜாவின் அறிக்கை மற்றொரு புயலை கிளப்பியுள்ளது.