LOADING...
ஆண்களுக்கு முன்பே சாதித்த பெண்கள்! 1973லேயே தொடங்கிய முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை; சுவாரசிய தகவல்கள்
1975 ஆடவர் உலகக்கோப்பைக்கு முன்பு 1973லேயே மகளிர் உலகக்கோப்பை தொடக்கம்

ஆண்களுக்கு முன்பே சாதித்த பெண்கள்! 1973லேயே தொடங்கிய முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை; சுவாரசிய தகவல்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 08, 2026
04:33 pm

செய்தி முன்னோட்டம்

பொதுவாக 1975 ஆம் ஆண்டு தான் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கப்பட்டது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1973 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கான முதல் உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆண்களுக்கான உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, கிரிக்கெட் விளையாட்டை உலகளாவிய ரீதியில் ஒரு தொடராக மாற்ற முடியும் என்று பெண்கள் கிரிக்கெட் நிரூபித்துக் காட்டியது.

முதல் தொடர்

1973 - முதல் உலகக்கோப்பை தொடர் மற்றும் வெற்றியாளர்

இந்த முதல் உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுடன் யங் இங்கிலாந்து மற்றும் இன்டர்நேஷனல் லெவன் ஆகிய மகளிர் கிரிக்கெட் அணிகளும் பங்கேற்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஆண்கள் உலகக்கோப்பை

ஆண்கள் உலகக் கோப்பை மற்றும் அதன் வளர்ச்சி

பெண்கள் உலகக் கோப்பை முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1975 ஆம் ஆண்டில் தான் ஆண்களுக்கான முதல் உலகக் கோப்பை (Prudential Cup) இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. அதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. பெண்கள் கிரிக்கெட் அமைத்த அந்தப் பாதைதான், இன்று கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற தொடராக விளங்கும் உலகக்கோப்பைத் தொடர்களுக்கு அடித்தளமாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

Advertisement