LOADING...
கால்பந்து உலகின் 'ஓல்ட் கார்டு' சகாப்தம் காலி! ரொனால்டோ, நெய்மரைத் தொடர்ந்து மெஸ்ஸிக்கும் இன்று கடைசி ஆட்டமா?
அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மட்டுமே இன்னும் மைதானத்தில் நின்றுகொண்டிருக்கிறார்

கால்பந்து உலகின் 'ஓல்ட் கார்டு' சகாப்தம் காலி! ரொனால்டோ, நெய்மரைத் தொடர்ந்து மெஸ்ஸிக்கும் இன்று கடைசி ஆட்டமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 07, 2026
03:08 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடர், வெறும் சாம்பியன்களை தீர்மானிக்கும் தொடராக மட்டும் அமையவில்லை; கடந்த 20 ஆண்டுகால உலகக் கால்பந்து வரலாற்றை ஆட்டிப்படைத்த மாபெரும் ஜாம்பவான்களின் விடைபெறும் அத்தியாயமாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஜூனியர், லூகா மோட்ரிச் போன்ற ஜாம்பவான்கள் கண்ணீருடன் வெளியேறியுள்ள நிலையில், பழைய தலைமுறையின் ஒரே ஒரு சிப்பாயாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மட்டுமே இன்னும் மைதானத்தில் நின்றுகொண்டிருக்கிறார். இன்று இரவு அட்லாண்டாவில் நடைபெறவுள்ள நாக்-அவுட் போட்டியில் எகிப்து அணியை எதிர்கொள்ளும் மெஸ்ஸிக்கு, இது வாழ்வா சாவா போராட்டமாகும்.

இறுதி ஆட்டம்

லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை 'இறுதி நடனம்'?

லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா): தனது 39-வது வயதில் 6-வது உலகக்கோப்பைத் தொடரில் விளையாடி வரும் மெஸ்ஸி, தற்போதைய தொடரில் 7 கோல்களுடன் 'கோல்டன் பூட்' (Golden Boot) பந்தயத்தில் முன்னிலையில் உள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை அடுத்தடுத்து இரண்டாவது முறையாகக் கோப்பையை நோக்கி அழைத்துச் செல்லும் மெஸ்ஸியின் கனவுக்கு, இன்று முகமது சாலாவின் எகிப்து அணி முட்டுக்கட்டையாக நிற்கிறது. இதில் தோற்றால் மெஸ்ஸியின் உலகக்கோப்பை சகாப்தம் அட்லாண்டாவில் இன்றோடு முடிவுக்கு வரும்.

ஓய்வு

ஓய்வு அறிவித்த நட்சத்திர வீரர்கள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்ச்சுகல்): ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு நேற்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. 16-வது சுற்று நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது. 6 உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையுடன், உலகக்கோப்பையை வெல்ல முடியாத பெரும் ஏமாற்றத்துடன் ரொனால்டோ விடைபெற்றுள்ளார். நெய்மர் ஜூனியர்(பிரேசில்): நெய்மர் நார்வேயிடம் பிரேசில் 2-1 எனத் தோற்று வெளியேறியவுடன், சர்வதேச கால்பந்திலிருந்தே தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்தார். 16 ஆண்டுகளுக்கு முன்பு எந்த நியூ ஜெர்சி மைதானத்தில் தனது முதல் சர்வதேச கோலை அடித்தாரோ, அதே மைதானத்தில் நார்வேக்கு எதிராக தனது கடைசி பெனால்டி கோலை அடித்து, "என்னால் முடிந்தவரை முயன்றேன், இத்துடன் முடிந்தது" என விடைபெற்றார்.

Advertisement

லூகா மோட்ரிச்

லூகா மோட்ரிச்சின் குரூரமான விடைபெறல்

2018-ல் ரன்னர்-அப், 2022-ல் மூன்றாமிடம் என குரோஷியாவை வழிநடத்திய 40 வயது மோட்ரிச், கடந்த ஜூலை 2 அன்று போர்ச்சுகலிடம் 2-1 எனத் தோற்று 32-வது சுற்றோடு வெளியேறினார். தனது நாட்டின் சார்பாக 200 போட்டிகளுக்கும் மேல் விளையாடிய 4-வது வீரர் என்ற பெருமையுடன் மோட்ரிச் விடைபெற்றுள்ளார். ரொனால்டோ, நெய்மர், சதியோ மானே, சன் ஹியுங் மின் என ஒரு சகாப்தமே இந்த உலகக்கோப்பையோடு விடைபெற்று, அதிகாரப்பூர்வமாக பொறுப்பை எர்லிங் ஹாலாண்ட் மற்றும் லாமின் யமால் போன்ற அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்து வருகிறது. நாளை காலைக்குள் மெஸ்ஸி அல்லது சாலா ஆகிய இருவரில் ஒருவரின் உலகக்கோப்பை சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கும், மற்றொருவர் இறுதிப்போட்டியை நோக்கித் தனது கடைசி நடனத்தைத் தொடர்வார்!

Advertisement