
'ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி ஏமாற்றம் அளிக்கிறது' : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு பதிலாக 2021இல் இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் ஷர்மா தலைமையில், டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அடுத்தடுத்து ஐசிசி போட்டிகளில் தோல்வியைத் தழுவி வருகிறது.
இந்நிலையில், சமீபத்திய உரையாடலில், சுனில் கவாஸ்கர், ரோஹித்தின் கேப்டன்ஷிப் மீது கேள்விகளை எழுப்பினார்.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து பட்டங்களை வென்று, வெற்றிகரமான கேப்டனாக உள்ள ரோஹித் ஷர்மா, தனது நற்பெயருக்கு நியாயம் செய்யவில்லை என்று கூறினார்.
சிறந்த ஐபிஎல் வீரர்களின் கலவையுடன் களமிறங்கியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி, டி20 உலகக்கோப்பையில் தோற்றது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
sunil gavaskar asks rahul dravid for accountability
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீதும் அதிருப்தி
சுனில் கவாஸ்கர் மேலும் கூறுகையில், தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐயால், இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகள் பற்றிய சரியான மதிப்பாய்வு செய்யப்பட்டதா என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்றதை பற்றி குறிப்பாகப் பேசிய அவர், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா, BCCI எடுத்த முடிவுகளை விளக்குமாறு கேட்டிருக்க வேண்டும் என்றார்.
கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் அதிக கடமை உள்ளதாகவும், அதை அவர்கள் சரியாக செய்கிறார்களா என்பது தெரியவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.