ENG vs PAK: பாகிஸ்தானுக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தையே கொடுத்தனர். தனது பங்களிப்பாக மலான் 31 ரன்களைக் குவிக்க, பேர்ஸ்டோ 59 ரன்களைக் குவித்து அரைசதம் கடந்தார். இவர்ளைத் தொடர்ந்து களமிங்கிய ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவருந் நிதானமான ஆட்டைத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழக்கால் அதே நேரம் ரன் குவிப்பிலும் ஈடுபட்டனர்.
கைகொடுக்காத அதிரடி ஆட்டம்:
ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் 20 ஓவர்களுக்கும் மேலாக விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். 41 மற்றும் 43வது ஓவர்களில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த பேட்டர்கள் அதிரடியைக் கையிலெடுத்தனர். கேப்டன் ஜாஸ் பட்லர், ஹாரி ப்ரூக் மற்றும் மொயீன் அலி என அனைவருமே அதிரடியாக ஆட முற்பட்டு முறையே 27, 30 மற்றும் 8 ரன்களுக்கு தங்களுடைய விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் அஃரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு 338 ரன்கள் இலக்கு.