LOADING...
14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வெற்றி; இந்தியாவின் உலக சாதனையைச் சமன் செய்தது
14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வெற்றி

14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வெற்றி; இந்தியாவின் உலக சாதனையைச் சமன் செய்தது

எழுதியவர் Sekar Chinnappan
Dec 27, 2025
03:12 pm

செய்தி முன்னோட்டம்

மெல்போர்னில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியானது வெறும் இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை

இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனையைச் சமன் செய்த இங்கிலாந்து

இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியாவை இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமன் செய்துள்ளது. இந்த பட்டியலில் 39 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 35 வெற்றிகளுடன் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது, 35 வெற்றிகளுடன் இங்கிலாந்து இந்திய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

போட்டி

இரண்டே நாட்களில் முடிந்த பரபரப்பான ஆட்டம்

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 132 ரன்களுக்குச் சுருண்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்த ஆடுகளத்தில், பென் டக்கெட் மற்றும் சாக் க்ராலி ஆகியோரின் சிறப்பான தொடக்கம் இங்கிலாந்துக்குக் கைகொடுத்தது. இடையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தாலும், இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி வெற்றியை எட்டியது. 19 போட்டிகள் மற்றும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்திருந்தாலும், ஏற்கனவே இந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டது (3-1) என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement