இதே நாளில் அன்று : கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான் பிராட்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தினம்
செய்தி முன்னோட்டம்
1928இல் நவம்பர் மாதம் இதே தினத்தில்தான் கிரிக்கெட் உலகின் பிதாமகன் என போற்றப்படும் சர் டொனால்ட் பிராட்மேன் முதன்முறையாக கிரிக்கெட் களத்தில் அடியெடுத்து வைத்தார்.
20 வயதான இளம் வீரராக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக தனது முதல் சர்வதேச அறிமுகத்தை செய்தார்.
அந்த போட்டியில், டான் பிராட்மேன் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 18 மற்றும் 1 ரன்கள் எடுத்தார்.
சுவாரஸ்யமாக, அதே ஆட்டத்தில், 46 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பெர்ட் அயர்ன்மோங்கர் அறிமுகமானார்.
அந்த நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வயதான வீரராக அவர்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Don Bradman debuts international cricket on this day
டான் பிராட்மேன் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
டான் பிராட்மேன் அறிமுகமான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 675 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 122 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 66 ரன்களும் மட்டுமே எடுத்து அவமானகரமான தோல்வியை சந்தித்தது.
டான் பிராட்மேனின் அறிமுக போட்டி மோசமான அனுபவமாக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 52 போட்டிகளில் பங்கேற்று 99.94 என்ற உச்சபட்ச சராசரியுடன் 29 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் உட்பட 6,996 ரன்கள் எடுத்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி போட்டியில் டக்கவுட் ஆனார்.
அதில் டக்கவுட் ஆகாமல் இருந்திருந்தால் 100 என்ற சராசரியுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றிருப்பார். எனினும் ஏழு முறை மட்டுமே அவர் டக்கவுட் ஆகியுள்ளார்.