கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்புவதாக ஹாட் ஸ்டார் அறிவிப்பு
வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஹாட்ஸ்டார் இந்தியாவில் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. எனினும் டிஸ்னி ஹாட்ஸ்டாரின் இந்த இலவச ஒளிபரப்பு மொபைல் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹாட்ஸ்டாரிடமிருந்து டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிறகு, உலகின் மிகவும் இலாபகரமான விளையாட்டுக்களில் ஒன்றான ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பியது. இதன் மூலம் முதல் ஐந்து வாரங்களில் 13 பில்லியன் டிஜிட்டல் பார்வைகளை ஜியோ சினிமா பதிவு செய்தது. ஒவ்வொரு பார்வையாளரும் ஒரு போட்டிக்கு சராசரியாக ஒரு மணிநேரம் செலவழித்துள்ளனர். ஐபிஎல் டிஜிட்டல் உரிமையை இழந்த பிறகு ஹாட்ஸ்டாரின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5மில்லியன் பயனர்கள் சுருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.