Page Loader
டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி தினேஷ் கார்த்திக் சாதனை
டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை மிஞ்சினார் தினேஷ் கார்த்திக்

டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி தினேஷ் கார்த்திக் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 28, 2025
04:24 pm

செய்தி முன்னோட்டம்

ஜனவரி 27ஆம் தேதி நடந்த எஸ்ஏ20 சீசனில் டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான பார்ல் ராயல்ஸ் போட்டியின் போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த போட்டி தொடங்கும் முன்னதாக, தோனியை விஞ்ச 21 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 21 ரன்கள் எடுத்தார். 39 வயதான அவர் இப்போது 361 டி20 இன்னிங்ஸ்களில் 7,451 ரன்கள் எடுத்துள்ளார். 26.99 சராசரியுடன், 136.84 ஸ்டிரைக் ரேட்டில், 34 அரை சதங்களுடன் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதில் 718 பவுண்டரிகள் மற்றும் 258 சிக்சர்களும் அடங்கும்.

எம்எஸ் தோனி

எம்எஸ் தோனியின் புள்ளிவிபரம்

மாறாக, எம்எஸ் தோனி 342 இன்னிங்ஸ்களில் 38.11 சராசரி மற்றும் 135.64 ஸ்ட்ரைக் ரேட், 28 அரைசதம், 517 பவுண்டரிகள் மற்றும் 338 சிக்ஸர்களுடன் 7,432 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், 332 இன்னிங்ஸ்களில் 7,160 ரன்களுடன், 308 இன்னிங்ஸ்களில் கார்த்திக் எடுத்த 6,547 ரன்களுடன் ஒப்பிடுகையில், தோனி விக்கெட் கீப்பர்-பேட்டராக அடித்த ரன்களில் முன்னணியில் இருக்கிறார். டோனி வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் தனது நிலையை மீட்டெடுக்க முடியும். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் 2024 ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. எஸ்ஏ20 லீக்கில் எட்டு ஆட்டங்களில் ஏழு வெற்றிகளுடன் பார்ல் ராயல்ஸ் ஆதிக்கம் செலுத்துவதால் கார்த்திக்கின் சாதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.