இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் : டேவிட் வார்னர் சாதனை
சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார். மூன்றாவது போட்டியில் 23 ரன்கள் எடுத்ததன் மூலம், வார்னர் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்துள்ளார். முன்னதாக, டெஸ்ட் தொடரில் வார்னருக்கு காயம் ஏற்பட்டு, கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஒருநாள் அணியில் அவர் சேர்க்கப்பட்டிருந்தாலும், முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் மூன்றாவது போட்டிக்கு முன்னதாக கேமரூன் கிரீனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் களமிறங்கினார்.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் டேவிட் வார்னரின் புள்ளி விபரங்கள்
ஈஎஸ்பிஎன்கிரிக் இன்போவின் கூற்றுப்படி, வார்னர் இப்போது இந்தியாவுக்கு எதிராக 53.31 ரன்களில் 1,013 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக 1,000 ரன்களுக்கு மேல் அடித்த 11வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான ஒன்பது ஒருநாள் போட்டிகளில், வார்னர் 51.75 சராசரியில் 414 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையில், அவர் உள்நாட்டில் இந்தியாவுக்கு எதிராக 12 ஒருநாள் போட்டிகளில் 49.36 என்ற சராசரியில் இந்தியாவிற்கு எதிராக 543 ரன்களையும், நடுநிலை மைதானங்களில் 56 என்ற சராசரியுடன் 56 ரன்களையும் எடுத்துள்ளார்.