Page Loader
அணியில் வாய்ப்பு வழங்காததால் கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்
அணியில் வாய்ப்பு வழங்காததால் கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

அணியில் வாய்ப்பு வழங்காததால் கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2023
05:41 pm

செய்தி முன்னோட்டம்

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படாததை அடுத்து, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க டேரன் பிராவோ முடிவு செய்துள்ளார். 34 வயதான அவர் கடைசியாக பிப்ரவரி 2022 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். 2023-24 சூப்பர் 50 கோப்பையில் ரன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து, 83.20 சராசரியில் 416 ரன்கள் எடுத்த போதிலும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியில் உள்ள பிராவோ கிரிக்கெட்டிற்கு ஓய்வை அறிவித்தாலும், எவ்வளவு காலம் ஆட்டத்தில் இருந்து விலக விரும்புகிறார் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை.

Darren Bravo takes break from internatonal cricket

டேரன் பிராவோவின் இன்ஸ்டாகிராம் பதிவு

தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில், ஒரு கிரிக்கெட் வீரராக எனது அடுத்த படி என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசிக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டேன் என்று பிராவோ கூறியுள்ளார். மேலும், "எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இது எளிதானது அல்ல. எந்த நிலை தொடர்பும் இல்லாமல் நான் மிகவும் இருண்ட இடத்தில் விடப்பட்டேன். நான் விட்டுக்கொடுக்கவில்லை, ஆனால் சிறிது நேரம் விலகிச் செல்வது சிறந்தது என்று நான் நம்புகிறேன். மேலும் ஒரு இளம் மற்றும் வரவிருக்கும் திறமைசாலிகளுக்கு சில இடங்களை உருவாக்கலாம். தேர்வான அனைவருக்கும் வாழ்த்து கூறி முடிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து தொடரின் போட்டிகள் டிசம்பர் 3, 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடக்க உள்ளன.

Instagram அஞ்சல்

டேரன் பிராவோ இன்ஸ்டா பதிவு