வெறும் ரவீந்திர ஜடேஜா இல்ல..இனி 'கிரிக்கெட் தளபதி' ரவீந்திர ஜடேஜா..!
செய்தி முன்னோட்டம்
CSKஅணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அபாரமாக பந்து வீசி, CSK வெற்றி பெற உதவினார்.
அவரது அற்புதமான ஆட்டத்திற்காக நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றார்.
அதன்பின்னர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே," MS தோனிக்கு தல, மற்றும் ரெய்னாவுக்கு சின்ன தல போன்ற பட்டங்களை போல, ஜடேஜாவிற்கு ஏதேனும் பட்டம் தரப்பட்டுள்ளதா?" எனக்கேட்டார்.
அதோடு, சிலர் அவரை 'கிரிக்கெட் தளபதி' எனக்குறிப்பிடுவது அவருக்கு தெரியுமா எனக்கேட்க, CSK அணியிடமிருந்து இதுபற்றி அதிகாரபூர்வ வெரிஃபிகேஷனுக்காக காத்திருப்பதாக விளையாட்டாக கூறினார் ஜடேஜா.
இதே உரையாடலை எக்ஸ் தளத்தில் ஹர்ஷா போக்லே பதிவிடவே, அதற்கு ஜடேஜா நன்றி தெரிவிக்க, அதற்கு சிஎஸ்கே அணியின் பதில் தற்போது வைரலாகி வருகிறது.
embed
'தளபதி' ரவீந்திர ஜடேஜா..!
#SportsUpdate | தல.. சின்ன தல.. தளபதி!#SunNews | #CSKvKKR | #Jadeja | @imjadeja | @ChennaiIPL pic.twitter.com/JMWI25pWVw— Sun News (@sunnewstamil) April 9, 2024
embed
'கிரிக்கெட் தளபதி' வெரிஃபைடு
𝗩𝗘𝗥𝗜𝗙𝗜𝗘𝗗 𝗔𝗦 𝗖𝗥𝗜𝗖𝗞𝗘𝗧 𝗧𝗛𝗔𝗟𝗔𝗣𝗔𝗧𝗛𝗬 😉#CSKvKKR #WhistlePodu #Yellove🦁💛— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024