சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு! முக்கிய வீரர் தொடரில் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
செய்தி முன்னோட்டம்
சிஎஸ்கே அணியின் ஸ்டார் பேட்டர் டெவோன் கான்வே, ஐபிஎல் 2024இன் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது, காயமடைந்த நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேவிற்கு, இடது கை கட்டை விரலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைய கான்வேக்கு குறைந்தபட்சம் 8 வாரங்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், மார்ச் 22ஆம் தேதி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் 2024 சீசனின் தொடக்க ஆட்டத்தை அவர் நிச்சயமாக இழக்க நேரிடும்.
ட்விட்டர் அஞ்சல்
சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு!
#SportsUpdate | காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் CSK வீரர் கான்வே பங்கேற்பதில் சிக்கல்#SunNews | #CSK | #DevonConway | #IPL2024 pic.twitter.com/4k9nAqujcY
— Sun News (@sunnewstamil) March 4, 2024