சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி: அனிருத் இசையுடன் ரீடென்க்ஷன் லிஸ்டை வெளியிட்டது CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலை அனிருத் இசையில் CSK அணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தோனி மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து அணியில் இடம்பெறுவார் என்பதை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Twitter Post
தோனி அன்கேப்ட் வீரராக தக்கவைக்கப்படுவார்
2019 ODI உலகக் கோப்பையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒரு uncaped வீரராக இடம்பெறுவார். குறிப்பிடத்தக்க வகையில், ஐபிஎல் 2021 இல் நீக்கப்பட்ட ஒரு விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ஐந்து ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறிய இந்திய வீரர்களை கேப் செய்யப்படாத வீரர்களாக ஏலத்தில் நுழைய அனுமதிக்கிறது. ரீடென்க்ஷன் லிஸ்டில் தோனியை 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது. அதேபோல் ருதுராஜ் 18 கோடிக்கும், மதிஷா 13 கோடிக்கும், ஜடேஜா 18 கோடிக்கும், ஷிவம் துபே 12 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.