
IPL 2025: ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்றாக 17 வயது இளம் வீரரை களமிறக்கும் CSK
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்றாக வேறொரு வீரரை தேர்வு செய்துள்ளது.
முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடரில் இருந்து நீக்கப்பட்டார் ருதுராஜ்.
தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்றாக 17 வயது இளம் வீரரை தேர்வு செய்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக மும்பை தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரேவை சிஎஸ்கே அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இந்த இளம் வீரர் சிஎஸ்கே அணியில் இணைவார் என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
விவரங்கள்
MI அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் களமிறங்குவார்
LSGக்கு எதிரான சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் அணியுடன் சேர ஆயுஷ் மத்ரேவிற்கு செல்ல போதுமான நேரம் இல்லை. ஆகையால், ஏப்ரல் 20 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அணியின் முக்கிய போட்டிக்கான அணியில் ஆயுஷ் இருப்பார்.
முன்னதாக, சிஎஸ்கே நிர்வாகம் ஆயுஷ் மத்ரேவை சோதனைகளுக்காக சென்னைக்கு வருமாறு கேட்டுக் கொண்டது.
அதன் இறுதியில் செலெக்டர்ஸ் அவரது பெயரை உறுதி செய்தனர்.
மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில், இந்த இளம் வீரர் 9 முதல் தர போட்டிகளில் 504 ரன்கள் எடுத்துள்ளார், இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.
ஏழு லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் உட்பட 458 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அக்டோபர் 2024 இல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#IPLClicks | CSK அணியில் இணையும் இளம் வீரர்?#SunNews | #CSK | #AyushMhatre | #RuturajGaikwad pic.twitter.com/ggzTvJmMWk
— Sun News (@sunnewstamil) April 14, 2025
சிஎஸ்கே அணி
எம்எஸ் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா?
2025 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டபோது, மீதமுள்ள போட்டிகளில் எம்எஸ் தோனி அணியை வழிநடத்துவார் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், கடந்த போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் CSK-வை வீழ்த்தியதை தொடர்ந்து, தோனியின் கேப்டன் பதவிக்கான திரும்புதல் ஒரு சிறந்த தொடக்கமாக அமையவில்லை.
ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான CSK இந்த சீசனில் மந்தமாக உள்ளது என்பதே நிதர்சனம். IPL புள்ளிபட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி