பள்ளிப்பருவ தோழியை கரம் பிடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் துஷார் தேஷ்பாண்டே
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு இது திருமண காலம் போல என கூறும் வகையில், ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்து துஷார் தேஷ்பாண்டே திங்கட்கிழமை (ஜூன் 12) திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 28 வயதான கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டே திங்களன்று மும்பையில் ஒரு ஆடம்பரமான விழாவில் தனது பள்ளி தோழியான நபா கட்டம்வாருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள துஷார் தேஷ்பாண்டே, "என் பள்ளி கிரஷில் இருந்து என் ஃபியான்சியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்!" என கூறியுள்ளார். அவரது திருமண நிச்சயதார்த்தத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரஷித் கிருஷ்ணாவும் கடந்த வாரம் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.