
சேப்பாக்கம் மைதான ஊழியர்கள் அனைவருக்கும் அன்பு பரிசு! நெகிழ வைத்த 'தல' தோனி!
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023இல் விளையாடியது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர்.
மே 23 ஆம் தேதி சென்னையில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ள நிலையில், சென்னையிலிருந்து கிளம்பும் முன் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் எம்எஸ் தோனி சேப்பாக்கம் மைதான ஊழியர்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் மைதான ஊழியர்களுக்கு அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான காணொளியை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், அது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Anbuden Thala - A mark of respect for the markers and the ground staff who toil hard to make us game ready! 💛📹#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/MTyFpvEWud
— Chennai Super Kings (@ChennaiIPL) May 25, 2023