சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போகுமா? இது நடந்தால் சாத்தியமே!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை சிறப்பாக செயல்பட்டு 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆனால் இன்னும் பிளேஆப் சுற்றுக்கு தங்கள் இடத்தை உறுதிப்படுத்தவில்லை.
கடைசியாக நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்யும் நிலையை இழந்தது.
டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால், எந்த சந்தேகமும் இல்லாமல் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் சூழலும் ஏற்பட வாய்ப்புண்டு.
if this happens csk wont play playoff
என்ன நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப் வாய்ப்பை இழக்கும்?
சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், மே 20ஆம் தேதி நடக்க உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக பிளேஆப் வாய்ப்புக்கு தகுதி பெறும்.
டெல்லி கேப்பிடல்ஸிடம் தோற்றால், மற்ற போட்டிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டும்.
இத்தகைய சூழலில் எல்எஸ்ஜி, எம்ஐ, பிபிகேஎஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளில் இரண்டு அணிகள் மட்டுமே 14 புள்ளிகளைக் கடந்திருந்தால் சிஎஸ்கே நான்காவது அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.
மேலே குறிப்பிட்ட நான்கு அணிகளில் மூன்று தங்கள் மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்றால், சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமலேயே வெளியேறும்.