LOADING...
ஐபிஎல் 2026-லிருந்து விலகினார் ஆயுஷ் மத்ரே: CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி
ஆயுஷ் மத்ரே, தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்

ஐபிஎல் 2026-லிருந்து விலகினார் ஆயுஷ் மத்ரே: CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2026
03:11 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் இளம் நட்சத்திரம் ஆயுஷ் மத்ரே, காயம் காரணமாக இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது சிஎஸ்கே அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. மத்ரேவின் காயம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள CSK நிர்வாகம், காயத்தின் தீவிரம் காரணமாக அவர் ஐபிஎல்-2026 தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு 6 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு மற்றும் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படுவதால், அவர் இந்த சீசனில் மீண்டும் களமிறங்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஆயுஷ் மத்ரே விரைவாகக் குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று சிஎஸ்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

காயம்

ஹைதராபாத் போட்டியில் ஏற்பட்ட காயம்

ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, 18 வயதான ஆயுஷ் மத்ரேவிற்கு இடது தொடைப் பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. ரன் எடுப்பதற்காக ஓடியபோது ஏற்பட்ட இந்த வலியையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து விளையாடினார். அந்தப் போட்டியில் அதிரடியாகத் தொடங்கிய மத்ரே, 13 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியை உலகக்கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்ற மத்ரே, சிஎஸ்கே அணியின் ஒரு முக்கிய தூணாக உருவெடுத்திருந்தார். ஏற்கனவே எம்.எஸ்.தோனி மற்றும் கலீல் அகமது ஆகியோர் காயம் காரணமாக விளையாடாத சூழலில், மத்ரேவின் விலகல் அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement