Page Loader
"ரொனால்டோ கோல் அடிக்கலானாலும் ஜெயிப்போம்" : அல் நாஸரின் அசத்தல் ஆட்டம்
"ரொனால்டோ கோல் அடிக்கலானாலும் ஜெயிப்போம்" : அல் நாஸரின் அசத்தல் ஆட்டம்

"ரொனால்டோ கோல் அடிக்கலானாலும் ஜெயிப்போம்" : அல் நாஸரின் அசத்தல் ஆட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 04, 2023
11:30 am

செய்தி முன்னோட்டம்

முந்தைய மூன்று ஆட்டங்களில் இரண்டு ஹாட்ரிக் கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். எனினும் அவரது அணி அல்-நாஸர் சவுதி ப்ரோ லீக்கில் அல்-பாடினை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளது. அல்-பாடின் ஆரம்பத்திலேயே ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருக்க அல் நாஸர் கோல் அடிக்க முடியாமல் தவித்தது. தான் எடுத்த கோல் முயற்சி வீணானதால் ரொனால்டோ எரிச்சலாகவும் விரக்தியுடனும் காணப்பட்டார். இதற்கிடையே இந்த சீசனில் ரொனால்டோவுடன் இணைந்து கவர்ந்த அப்துல்ரஹ்மான் 93வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 1-1 என முன்னேறியது. அடுத்தடுத்து 2 கோல்கள் அடிக்க 3-1 என வெற்றி பெற்றது. இதற்கிடையே ரொனால்டோவின் கோல் மிஸ்ஸான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ரொனால்டோ கோல் மிஸ்ஸிங் வீடியோ