
திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன்
செய்தி முன்னோட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் கிரிக்கெட்டுக்கு தேவையான உள்கட்டமைப்பை பரவலாக்க எடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து முருகம்பாளையத்தில் வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நவீன பயிற்சி மையத்தை உருவாக்கியுள்ளது.
இதில் கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்து பேசிய டி நடராஜன், "நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்ததை விட இப்போது வாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல், ஐபிஎல் மூலம் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. டிஎன்பிஎல் மூலம் 13 வீரர்கள் ஐபிஎல்லுக்கு விளையாட சென்றுள்ளனர்." என்று தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"கிரிக்கெட்டில் முன்பு இல்லாத வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால், இளைஞர்கள் அதை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்" -கிரிக்கெட் வீரர் நடராஜன்#SunNews | #CricketAcademy | @Natarajan_91 pic.twitter.com/XFoGrEg8Lb
— Sun News (@sunnewstamil) June 9, 2023