சிஸ்டத்தால் தோற்றுப்போன வினேஷ் போகட்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) தனது ஓய்வை அறிவித்த சிறிது நேரத்திலேயே, வினேஷ் போகத் சண்டையிட்டு சோர்வடைந்து விட்டார் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த பெண் இந்த அமைப்பால் சோர்வாக உள்ளார்... இந்த பெண் சண்டையிட்டு சோர்வடைந்து விட்டார்." என்று கூறினார். முன்னதாக, 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, தனது தைரியம் எல்லாம் உடைந்துவிட்டது என்றும், தாயின் கனவை நனவாக்க முடியவில்லை என்றும் கூறி, குட் பை 2001-2024 என வினேஷ் போகத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சசி தரூர் எக்ஸ் பதிவு
வினேஷ் போகத் பின்னணி மற்றும் புள்ளிவிபரங்கள்
ஹரியானாவைச் சேர்ந்த 29 வயதான வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் மூன்று வெவ்வேறு எடைப் பிரிவுகளில் போட்டியிட்டுள்ளார். 2016 ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத், 2020 ஒலிம்பிக்கில் 53 கிலோவில் போட்டியிட்டார். 2014, 2018 மற்றும் 2022 ஆகிய மூன்று காமன்வெல்த் விளையாட்டுகளில் மூன்று வெவ்வேறு எடைப் பிரிவுகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும் வினேஷ் பெற்றார். மேலும் 2019 மற்றும் 2022ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் முறையே இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.