LOADING...
ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் தமன்னா: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் தமன்னா இடம்பெறுவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது பிசிசிஐ

ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் தமன்னா: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 29, 2023
04:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கும் நிலையில், தொடக்க விழாவில் நடிகை தமன்னா இடம் பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது . மேலும் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கும் எனவும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு முதல்முறையாக இந்தியாவில் பழைய முறைப்படி ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில், அதற்கான தொடக்க விழாவை மிக பிரமாண்டமாக நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமன்னா மட்டுமல்லாது வேறு சில திரை பிரபலங்களின் நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவில் இடம் பெறும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஐபிஎல் ட்வீட்