அடுத்த செய்திக் கட்டுரை

செஸ் இரட்டையர்கள் : கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ஆர்
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 21, 2023
01:33 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் செஸ் வீரர் விக்னேஷ் என்ஆர், ஜெர்மனியில் பேட் ஸ்விஷெனாவில் நடந்த 24வது நோர்ட்வெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஐஎம் இல்ஜா ஷ்னைடரை தோற்கடித்து, பட்டம் வென்றார்.
இதன் மூலம் செஸ் லைவ் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளை தாண்டி இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
சென்னையை சேர்ந்த விக்னேஷின் மூத்த சகோதரர் விசாக் என்ஆர் 2019 இல் இந்தியாவின் 59வது கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தார்.
இதன் மூலம் தற்போது விசாக் மற்றும் விக்னேஷ் இருவரும் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் சகோதரர்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
விக்னேஷ் என்ஆர்
A tale of 2 brothers!
— The Bridge (@the_bridge_in) February 21, 2023
Vignesh NR became India's 80th chess Grandmaster recently.
In 2019, his elder brother Visakh NR had become India's 59th Chess GM.#Chess pic.twitter.com/ZJIH7OOmWD