LOADING...
ஜடேஜாவைக் கொடுத்து சிஎஸ்கேவுக்கு ரூ.18 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார் சஞ்சு சாம்சன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
ஜடேஜாவைக் கொடுத்து சிஎஸ்கேவுக்கு ரூ.18 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார் சஞ்சு சாம்சன்

ஜடேஜாவைக் கொடுத்து சிஎஸ்கேவுக்கு ரூ.18 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார் சஞ்சு சாம்சன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2025
01:10 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 க்கான வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடு நெருங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை ₹18 கோடிக்கு வர்த்தகம் மூலம் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது. எம்எஸ் தோனிக்குப் பின் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட, இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனைத் தேடிய சிஎஸ்கேவுக்கு சஞ்சு சாம்சன் சிறந்த தேர்வாக அமைந்துள்ளார். இதற்குப் பதிலாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கே அணியின் தூண்களாக இருந்த ரவீந்திர ஜடேஜா (₹14 கோடிக்கு ஒப்பந்தம்) மற்றும் சாம் கரண் (₹2.4 கோடிக்கு ஒப்பந்தம்) ஆகியோரைப் பெற்றுள்ளது. ரவீந்தர ஜடேஜாவுடன் பரஸ்பர புரிதலுடன் இந்த முடிவை எடுத்ததாகச் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உறவு

சிஎஸ்கேவுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலான உறவு

சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை வர்த்தகம் செய்வது கடினமான முடிவுகளில் ஒன்றாகும். அவர்களின் பங்களிப்பிற்குக் கடமைப்பட்டுள்ளோம். சஞ்சு சாம்சனை வரவேற்கிறோம். அவரது திறமையும், தலைமைப் பண்பும் எங்கள் லட்சியங்களுக்கு உதவுகிறது. இது நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவு" என்றார். சஞ்சு சாம்சனைப் பெற்றதன் மூலம், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். இது சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும். அதேசமயம், ஜடேஜா மற்றும் சாம் கரண் வருகையால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கீழ்நிலை மிடில் ஆர்டர் வலுப்பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரவீந்திர ஜடேஜாவின் ராஜஸ்தான் ராயல்ஸ் பின்னணி

ஐபிஎல் அறிமுகமான 2008 தொடரில் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அவரது முதல் ஐபிஎல் அணியாகும். 2008 மற்றும் 2009 என இரண்டு சீசன்களுக்கு அங்கு இருந்த ஜடேஜா, அதன் பின்னர் 2011இல் கொச்சி டஸ்கர்ஸ் அணியில் விளையாடினார். 2012இல் சிஎஸ்கே அணியில் இணைந்த ஜடேஜா, 2025 சீசன் வரை அணியின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக திகழ்ந்தார். இடையில் சிஎஸ்கே தடை செய்யப்பட்டிருந்த இரண்டு வருடங்கள் மட்டும் குஜராத் லயன்ஸ் அணியில் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல்லில் தனது கேரியரை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கே மீண்டும் சென்றுள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.