
சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் : சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) திங்களன்று (மார்ச் 27) அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் மேற்கொள்ளும் பயிற்சியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மைதானத்தில் சி, டி மற்றும் இ ஸ்டாண்டுகள் பயிற்சி அமர்வுகளை ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு திறக்கப்படும் என ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அணித் தலைவர் எம்.எஸ்.தோனி மற்றும் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட உள்ளார்கள்.
இதற்கிடையே, கடந்த சீசனில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சிஎஸ்கே ட்வீட்
A sweet surprise to our Anbaana Fans 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
See you all at the Super Practice today evening 🙌#WhistleFromChepauk pic.twitter.com/pp0M44LR0J