சென்னையில் இருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு மாறும் சர்வதேச டென்னிஸ் போட்டி
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற 'சென்னை ஓபன்' WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், 22 நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இருப்பினும், சென்னையில் நிலவும் வடகிழக்குப் பருவமழை காரணமாக போட்டிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருவது இந்த இடமாற்றத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
பருவமழையால் போட்டி மாற்றம்
டென்னிஸ் சங்கத் தலைவர் விளக்கம்
இதனால் வீராங்கனைகளின் கால அட்டவணை மற்றும் சர்வதேச ஒளிபரப்பைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டுக்கான WTA டென்னிஸ் தொடரை பிலிப்பைன்ஸுக்கு மாற்ற மகளிர் டென்னிஸ் சங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு போட்டியை இங்கு நடத்த முடியாத சூழல் இருந்தாலும், அதற்கு மாற்றாக 2028 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் WTA 125 போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை நமது இந்திய வீராங்கனைகளின் சர்வதேச தரவரிசையை உயர்த்தப் பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.