Page Loader
பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!
பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்

பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

எழுதியவர் Sekar Chinnappan
May 26, 2023
05:10 pm

செய்தி முன்னோட்டம்

தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்தியாவுக்கு இரண்டாவது நாளில் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது. 10 மீ ஏர் பிஸ்டல் SH1 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான மனிஷ் மற்றும் நிஷா மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர். இதில் முதல் இரண்டு இடங்களையும் சீன வீரர்கள் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றியுள்ளனர். முன்னதாக பாரா உலக துப்பாக்கிச் சுடுதல் கோப்பை போட்டியின் முதல் நாளில் இந்திய பாரா வீராங்கனை அவானி லெகாரா தனிநபர் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், குழு பிரிவில் அமிர், ராகுல் மற்றும் நிஹால் வெண்கலத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post