பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்குகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடக்கும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் பாட் கம்மின்ஸ் தங்கள் அணிகளை வழிநடத்துகின்றனர். இதன் மூலம், பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல் முறையாக இருதரப்பிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அணிகளை வழிநடத்தும் சிறப்பை பெருகின்றனர். இந்த தனித்துவமான தருணம் கிரிக்கெட்டில் தலைமைப் பாத்திரங்களின் பரிணாமத்தை எடுத்துக்காட்டுகிறது. வழக்கமாக கேப்டன்சி பேட்டர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கேப்டன்
வேகப்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிகளுக்கு தலைமை தாங்குவது அரிது. இந்திய கிரிக்கெட் அணியின் கடைசி வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் (1983-1987) ஆவார். இந்நிலையில், போட்டிக்கு முன்னதாகப் பேசிய பாட் கம்மின்ஸ், ஜஸ்ப்ரீத் பும்ராவின் நியமனத்தைப் பாராட்டி, அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் தலைமைப் பாத்திரங்களை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "வேகப் பந்துவீச்சாளர்கள் கேப்டனாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேகப்பந்து வீச்சின் ரசிகனாக, இது அடிக்கடி நடக்கும் என்று நம்புகிறேன்." என்று பாட் கம்மின்ஸ் மேலும் கூறினார். இதற்கிடையே, பெர்த்தில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டி இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது.