Page Loader
பிறந்தநாளில் சதமடித்த விராட் கோலி; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து அசத்தல்
சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

பிறந்தநாளில் சதமடித்த விராட் கோலி; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து அசத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2023
05:46 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவ.5) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்தார். முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கினார். இந்த போட்டியில் விராட் கோலி நிதானமாக விளையாடி சதமடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு 49வது சதமாகும். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் தனது 35வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், இந்த சதம் பிறந்தநாளை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

Virat Kohli 3rd Indian scores century in his birthday

பிறந்தநாளில் சதமடித்த மூன்றாவது இந்தியர்

விராட் கோலி தனது 101 ரன்கள் மூலம் 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளதோடு, தனது பிறந்தநாளில் சதமடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் தனது பிறந்தநாளில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் வினோத் காம்ப்ளி 1993இல் பெற்றார். ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் இந்த சாதனையை செய்தார். அவரைத் தொடர்ந்து 1998இல் சச்சின் டெண்டுல்கர் இந்த பெருமையை பெற்ற நிலையில், தற்போது விராட் கோலி பெற்றுள்ளார். மேலும், உலக அளவில் தனது பிறந்த நாளில் சதமடித்த ஏழாவது வீரராகவும் கோலி உள்ளார்.