இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினென்டல் கோப்பை ஜூன் 9 முதல் 18 வரை புவனேஸ்வரில் நடைபெறவுள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக மும்பை (2018) மற்றும் அகமதாபாத்தில் (2019) இண்டர்காண்டினென்டல் கோப்பை நடைபெற்றுள்ள நிலையில், இது இந்தியாவில் நடக்கும் மூன்றாவது போட்டியாகும். இண்டர்காண்டினென்டல் கோப்பை போட்டியை நடத்தும் இந்தியாவுடன் லெபனான், மங்கோலியா, வனுவாடு ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷாஜி பிரபாகரன், "புவனேஸ்வர் பிபா யு-17 மகளிர் உலக கோப்பையின் அரங்குகளில் ஒன்றாகும். அதனுடன், ஒடிசா அரசாங்கத்தால் சில சிறந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால் போட்டியை புவனேஸ்வரில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது." என்று கூறினார்.