ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்; வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் மூன்றெழுத்து ரியாக்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான பூர்வாங்க அணியில் இடம் பெற்றுள்ளார். முன்னதாக, 2022 ஜூலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. இதனால் அவரது திறமையை கருத்தில் கொண்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில், எக்ஸ் தளத்தில் "LOL" என பென் ஸ்டோக்ஸ் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.