டி20 உலகக் கோப்பை 2024-இல் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை
செய்தி முன்னோட்டம்
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரும், டெஸ்ட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ், முழு உடல் தகுதி பெறவும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர் மற்றும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி பிரச்சினைகளை சந்தித்து வரும் பென் ஸ்டோக்ஸ் கடைசியாக, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார்.
அதற்கு முன்னர் தான், அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் பந்து வீசுவதை தவிர்த்து வந்தார்.
embed
பென் ஸ்டோக்ஸ் விலகல்
Ben Stokes#benstokes #sport pic.twitter.com/hpcePm237k— RVCJ Sports (@RVCJ_Sports) April 2, 2024