NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எல்எஸ்ஜி அணிக்கு புதிய கேப்டன்? கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்எஸ்ஜி அணிக்கு புதிய கேப்டன்? கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்!
    கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்

    எல்எஸ்ஜி அணிக்கு புதிய கேப்டன்? கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 03, 2023
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    திங்கட்கிழமை (மே 1) நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) கேப்டன் கேஎல் ராகுலுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது.

    முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்தபோது கீழே விழுந்து அடிபட்டதால், பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

    இரண்டாவது இன்னிங்சில் அவருக்கு பதிலாக ஆயுஷ் படோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

    ஆனால் 9 வது விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு கே.எல்.ராகுல் களமிறங்கி வலியுடனேயே பேட்டிங் செய்தார்.

    இந்நிலையில், அவரது காயத்தின் அளவு குறித்து தெளிவாக தெரியாத நிலையில், பிசிசிஐ கே.எல்.ராகுலை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முடிவு செய்துள்ளது.

    இதனால் இந்த தொடரில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக வேறு ஒருவரை முழுநேர கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் எல்எஸ்ஜி உள்ளது.

    why bcci gives importance to kl rahul

    கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

    தற்போதைய சூழ்நிலையில் கே.எல்.ராகுல் எல்எஸ்ஜி அணியில் தொடர்கிறார். அவரது காயத்தின் களவு குறித்து அறிய ஸ்கேன் செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறப்பட உள்ளது.

    ஆனால் ஐபிஎல் முடிந்த உடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    இதில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாக அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைவது அவசியமாகிறது.

    இதனால் கடைசி நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாத பிசிசிஐ அவரை, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றி, தனது கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே எல்எஸ்ஜி அணியின் துணை கேப்டனாக இருக்கும் க்ருனால் பாண்டியா, இந்த தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : நாடு திரும்புகிறாரா மார்க் வுட்? சிக்கலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    GT vs MI : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்! மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர்! எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ டேவிட் வார்னர்

    ஐபிஎல் 2023

    டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்கலாம் : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெல்லி கேப்பிடல்ஸ்
    கேகேஆர் அணிக்கு எதிராக அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? விராட் கோலி
    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் விபரம் ஐபிஎல்
    CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள் ஐபிஎல்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்! அஸ்வின் ரவிச்சந்திரன்
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா ஐசிசி
    ஐபிஎல்லுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி : பிசிசிஐ புது திட்டம் ஐபிஎல் 2023
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்லுமா? சச்சின் சொல்வது இது தான் டெஸ்ட் கிரிக்கெட்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சொந்த மண்ணில் எல்எஸ்ஜியை வீழ்த்துமா சிஎஸ்கே? சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025