Page Loader
ஒருநாள் உலகக்கோப்பை: ரசிகர்கள் அனைவருக்கும் இலவச குடிநீர் வசதி வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு
ரசிகர்கள் அனைவருக்கும் இலவச குடிநீர் வசதி வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு

ஒருநாள் உலகக்கோப்பை: ரசிகர்கள் அனைவருக்கும் இலவச குடிநீர் வசதி வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2023
07:18 pm

செய்தி முன்னோட்டம்

வியாழன் (அக்டோபர் 5) அன்று இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கியுள்ள நிலையில், போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச மினரல் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வழங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த முடிவை தனது எக்ஸ் பதிவின் மூலம் வெளியிட்டதோடு, ரசிகர்கள் அனைவரும் எந்தவித விலையுமின்றி குடிநீரை பெறுவார்கள் என அறிவித்தார். முன்னதாக, கடந்த ஜூலை மாதமே ஜெய் ஷா இது குறித்து அறிவித்ததோடு, உலகக்கோப்பை தொடர் முழுவதும் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், சொன்னபடி இந்த முடிவை பிசிசிஐ தற்போது அமல்படுத்தி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு