ஐசிசி தலைவர் பார்க்லேவின் பதவிக்காலம் நிறைவு: ஜெய் ஷா அடுத்த தலைவர் ஆகிறாரா?
தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே செவ்வாயன்று தனது பதவிக்காலத்தை நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்ததை அடுத்து, ICC தலைவர் போட்டியிலிருந்து அவர் அதிகாரபூர்வமாக விலகினார். பார்க்லேயின் பதவிக்காலம் நவம்பர் 30 அன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, ICC தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுக்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக ஆகஸ்ட் 27 என குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், புதிய தலைவரின் பதவிக்காலம் 1 டிசம்பர் 2024 அன்று தொடங்கும் வகையில் தேர்தல் நடத்தப்படும்." என ICC போர்டு தெரிவித்துள்ளது. எனினும் இந்த பதவிக்கு பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Twitter Post
ஜெய் ஷாவிற்கு பெருகும் ஆதரவு
ஐசிசி தலைவராக தேர்வாகும் நபர், தலா இரண்டு ஆண்டுகள் என மூன்று முறை தலைவர் பதவியை வகிக்க தகுதியுடையவர். ஐசிசி விதிகளின்படி, தலைவர் தேர்தலில் 16 வாக்குகள் உள்ளன, இப்போது வெற்றியாளருக்கு ஒன்பது வாக்குகள் (51%) தேவை. முன்னதாக, தலைவராக பதவியேற்பதற்கு, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் ஐசிசி போர்டு அறையில் மிகவும் செல்வாக்கு மிக்க முகமாக ஷா கருதப்படுகிறார். அவர் தற்போது ஐசிசியின் அனைத்து அதிகாரமுள்ள நிதி மற்றும் வணிக விவகாரங்கள் (F&CA) துணைக் குழுவின் தலைவராக உள்ளார். அதேபோல, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 வாக்களிக்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுடன் அவர் நல்ல நட்பை பேணுவதால் அவர்களின் ஆதரவும் ஜெய் ஷாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.