LOADING...
டிராவிட் மற்றும் மிதாலி ராஜுக்கு கௌரவம்! பிசிசிஐ நமன் விருதுகளை வென்ற நட்சத்திரங்கள் யார் யார்? இதோ முழு லிஸ்ட்
ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட், மிதாலி ராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

டிராவிட் மற்றும் மிதாலி ராஜுக்கு கௌரவம்! பிசிசிஐ நமன் விருதுகளை வென்ற நட்சத்திரங்கள் யார் யார்? இதோ முழு லிஸ்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
02:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2026 ஆம் ஆண்டிற்கான நமன் விருதுகளை அறிவித்துள்ளது. நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ள இதற்கான பிரம்மாண்ட விழாவில், இந்தியக் கிரிக்கெட்டிற்கு ஈடுஇணையற்ற பங்களிப்பை வழங்கிய ராகுல் டிராவிட், மிதாலி ராஜ் மற்றும் ரோஜர் பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

கிரிக்கெட் ஜாம்பவான்கள்

கௌரவிக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

கிரிக்கெட்டில் இந்தியாவின் 'தடுப்புச்சுவர்' என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் 24,000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்தவர். வீரராக மட்டுமல்லாமல், பயிற்சியாளராகவும் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். அதேபோல், மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரிய மிதாலி ராஜுக்கும், 1983 உலகக் கோப்பை நாயகன் மற்றும் பிசிசிஐ தலைவராகப் பணியாற்றிய ரோஜர் பின்னிக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் விருதுகள் (2024-25)

சர்வதேச அரங்கில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024-25 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை ஷுப்மன் கில் வென்றுள்ளார். மகளிர் பிரிவில் சிறந்த சர்வதேச வீராங்கனை மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்ததற்கான விருதுகளை ஸ்மிருதி மந்தனா தட்டிச் சென்றுள்ளார். சிறந்த அறிமுக வீரராக ஹர்ஷித் ராணாவும், வீராங்கனையாக என். ஸ்ரீ சரணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

உள்நாட்டு கிரிக்கெட்

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இதர விருதுகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி டிராபி எலைட் பிரிவில் அதிக ரன்கள் எடுத்த வித்ர்பா அணியின் யஷ் ரத்தோட் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷ் துபே ஆகியோருக்கு மாதவ்ராவ் சிந்தியா விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஹேம்சுதேசன் (U19) கூச் பெஹார் டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி எம்.ஏ.சிதம்பரம் விருதைப் பெறுகிறார். மேலும், சிறந்த உள்நாட்டு நடுவராக உல்லாஸ் காந்தே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாகச் சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் சங்கத்திற்கான விருதை மும்பை கிரிக்கெட் சங்கம் வென்றுள்ளது.

Advertisement