Page Loader
மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம்
மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம்

மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
May 19, 2023
07:16 pm

செய்தி முன்னோட்டம்

பிசிசிஐ மே 27 அன்று ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்த கூட்டத்தில் ஒரு பணிக்குழுவை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்த கூட்டத்தின் முடிவில், ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பையின் 13 வது சீசனை இந்தியா நடத்துகிறது. ஆனால் இதற்கான மைதானங்கள் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற பேச்சு அடிபடுகிறது.

bcci schedule for sgm meeting

சிறப்பு பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள்

மே 27 ஆம் தேதி நாடாகும் சிறப்பு பொதுக்கூட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான தயாரிப்புகளை மேற்பார்வையிட குழு ஒரு பணிக்குழுவை உருவாக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கொள்கையை அங்கீகரிப்பதாகும். மகளிர் ஐபிஎல் குழுவை அமைப்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மானிய துணைக் குழுவை உருவாக்குதல், மாநில அணிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான வழிகாட்டுதல்கள் போன்றவை இந்த விவாதத்தில் முக்கிய இடம் பெறும் எனத் தெரிகிறது.