LOADING...
ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!
இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை

ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2025
01:48 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு ரூ.21 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தத் தகவலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரம்

ஆசிய கோப்பை இறுதி போட்டியின் சுருக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இந்தச் சாதனையைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.