அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி
வங்கதேசம் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹீம் முதல் இன்னிங்சில் சதமும், இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் அடித்த நிலையில், தைஜுல் இஸ்லாம் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். முன்னதாக, டாஸ் வென்ற அயர்லாந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 214 ரன்களுக்கு சுருண்ட நிலையில், வங்கதேசம் 369 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் அயர்லாந்து லோர்கன் டக்கரின் அபார சதத்தால் 294 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், போட்டியின் நான்காவது நாளில் வெற்றி இலக்கான 138 ரன்களை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் வங்கதேசம் எட்டியது.
வங்கதேசம் vs அயர்லாந்து : முக்கிய புள்ளிவிபரங்கள்
ஒயிட்-பால் கிரிக்கெட்டில் பிரகாசித்த பிறகு, அயர்லாந்தின் பேட்டிங் ஸ்டார் ஹாரி டெக்டர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதங்களை விளாசினார். விக்கெட் கீப்பர்-பேட்டர் லோரன் டக்கர் கெவின் ஓ'பிரையனுக்கு (118) பிறகு அயர்லாந்துக்காக சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆனார். இவருக்கும் இது அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 162 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹீம் தனது 10வது டெஸ்ட் சதத்தை 9126 ரன்கள்) தனது அணியின் முதல் இன்னிங்ஸில் எடுத்தார். பங்களாதேஷ் வீரர்களில் தமிம் இக்பால் (10), மொமினுல் ஹக் (11) மட்டுமே அதிக அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் கொண்டுள்ளனர்.