NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ENGvsBAN T20I : டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த லிட்டன் தாஸ்
    விளையாட்டு

    ENGvsBAN T20I : டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த லிட்டன் தாஸ்

    ENGvsBAN T20I : டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த லிட்டன் தாஸ்
    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 14, 2023, 07:04 pm 0 நிமிட வாசிப்பு
    ENGvsBAN T20I : டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த லிட்டன் தாஸ்
    டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த லிட்டன் தாஸ்

    டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் லிட்டன் தாஸ் தனது டி20 கிரிக்கெட் கேரியரில் அதிக ரன்களை எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 57 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் தனது ஒன்பதாவது அரை சதத்தை பதிவு செய்தார். இது இப்போது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த டி20 ஸ்கோர் ஆகும். 17வது ஓவரில் ஆட்டமிழக்கும் முன் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி, டி20 கிரிக்கெட்டில் 1,450 ரன்களை கடந்தார். இதன் மூலம் லிட்டன் தாஸ் இப்போது டி20 கிரிக்கெட்டில் ஒன்பது அரைசதங்களைக் கொண்டுள்ளார். இருப்பினும், அவர் இன்னும் டி20 சதம் அடிக்கவில்லை.

    டி20 கிரிக்கெட்டில் லிட்டன் தாஸ் புள்ளிவிபரம்

    68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள லிட்டன் தாஸ் 22.45 என்ற சராசரியில் 128.53 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,482 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் தான் தாஸ் தனது முதல் அரைசதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20 கிரிக்கெட்டில் 1,500 ரன்களை நெருங்கியுள்ள லிட்டன் தாஸ், அதை கடந்தால், இதை செய்யும் வங்கதேசத்தின் ஐந்தாவது பேட்டர் என்ற பெருமையை தாஸ் பெறுவார். முன்னதாக, ஷகிப் அல் ஹசன் (2,281), மஹ்முதுல்லா (2,122), தமிம் இக்பால் (1,758), முஷ்பிகுர் ரஹீம் (1,500) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கிரிக்கெட்
    டி20 கிரிக்கெட்

    கிரிக்கெட்

    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட் செய்திகள்
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ரவீந்திர ஜடேஜா
    'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்! ஐபிஎல்

    டி20 கிரிக்கெட்

    இன்னும் 87 ரன்கள்தான் தேவை..! டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மான் கில்? கிரிக்கெட்
    16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை! ஐபிஎல்
    ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை! ஐபிஎல்
    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023